Friday, 7 December 2012

science


செவ்வாய்க்கு செல்கிறது மற்றுமொரு ரோபோ...


செவ்வாய் கிரகத்திற்கு மற்றுமொரு ரோபோ இயந்திரத்தை 2020ஆம் ஆண்டு அனுப்பவுள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்துள்ளது.
இந்த புதிய ரோபோ இயந்திரம் ஏற்கனவே செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பட்டுள்ள க்யூரியாசிட்டி ரோபோ இயந்திரத்தை அடிப்படையாகக் கொண்டதென நாசா கூறியுள்ளது.
அமெரிக்க புவியியல்சார் ஒன்றியத்தின் சந்திப்பில் ரோபோ இயந்திரமொன்று நிர்மாணிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பூமி மற்றும் கிரகங்கள் தொடர்பான விஞ்ஞானிகள் கலந்துகொள்ளும் மிக முக்கியம்வாய்ந்த வருடாந்த சந்திப்பு இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி செவ்வாயில் தரையிறங்கிய க்யூரியாசிட்டி ரோபோ இயந்திரத்தைப் பயன்படுத்தி தொடர்ந்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

No comments:

Post a Comment